உள்ளூர் செய்திகள்

முத்துலட்சுமி.

கடையத்தை தாலுகாவாக அறிவிக்க வேண்டும்-பஞ்சாயத்து தலைவர் கோரிக்கை

Published On 2022-07-07 08:54 GMT   |   Update On 2022-07-07 08:54 GMT
  • கடையம் ஒன்றியம் ஆனது கடையம், ஆழ்வார்குறிச்சி என இரண்டு பிர்காகளை உள்ளடக்கியதாகும்.
  • சபாநாயகருக்கு, கடையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி ராமதுரை மற்றும் 23 பஞ்சாயத்து தலைவர் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் 23 பஞ்சாயத்துகளையும் ஒரு பேரூராட்சியையும் உள்ளடக்கியதாக உள்ளது. சுமார் ஒரு லட்சம் மக்கள்தொகை உடையது.

தற்போது ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் உள்ளது.தென்காசி மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு அம்பை தாலுகாவில் இணைந்திருந்தது.

கடையம் ஒன்றியம் ஆனது கடையம், ஆழ்வார்குறிச்சி என இரண்டு பிர்காகளை உள்ளடக்கியதாகும். அடைச்சாணி ஆம்பூர் போன்ற கிராமங்களில் இருந்து தென்காசி தாலுகா அலுவலகம் செல்வதற்கு சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது .இதையடுத்து கடையத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கடையம் வந்த சபாநாயகர் அப்பாவுவிடம் தெற்குகடையம் பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி ராமதுரை மற்றும் கடையம் 23 பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

கொடுக்கப்பட்ட மனுவை சபாநாயகர் அப்பாவு வருவாய் துறை அமைச்சருக்கு, கடையத்தை தாலுகாவாக பிரித்து உதவிட வேண்டுமென்று பரிந்துரை செய்துள்ளார்.

இதையடுத்து சபாநாயகருக்கு, கடையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி ராமதுரை மற்றும் 23 பஞ்சாயத்து தலைவர் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News