உள்ளூர் செய்திகள்

விழாவில் கன்றுகள் சீறிப்பாய்ந்து ஓடி வருவதை படத்தில் காணலாம்.

கே.திப்பனப்பள்ளியில் எருதுவிடும் விழா

Published On 2022-07-04 10:06 GMT   |   Update On 2022-07-04 10:06 GMT
  • 50 கன்றுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
  • விழாவினை காண ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் வந்திருந்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு தொடர்ந்து 3 மாதங்கள் பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் திருவிழா, எருதாட்டம் மற்றும் கன்று விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

இந்த விழாவினை கிராம மக்கள் சிறப்பாக நடத்தி, போட்டி போட்டுக்கொண்டு பரிசுகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.திப்பனப்பள்ளி கிராமத்தில் கன்று விடும் விழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கன்றுகள் அழைத்துவரப்பட்டு, போட்டியில் பங்கேற்க செய்தனர்.

இதில் குறைந்த தூரத்தை விரைவில் கடந்த கன்றுகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரம் என மொத்தம் 50 கன்றுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இந்த விழாவினை காண ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் வந்திருந்தனர்.

Tags:    

Similar News