உள்ளூர் செய்திகள்
- தனசேகர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தொடுகாடு பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார்.
- நகை கொள்ளை சம்பவம் குறித்து தனசேகர் மணவாள நகர் போலீசில் புகார் செய்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பணந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர். கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி மருந்தாளுநராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 17-ந் தேதி தனசேகர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தொடுகாடு பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார். பின்னர் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு தனசேகர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 சவரன் தங்க நகைளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தனசேகர் மணவாள நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.