உள்ளூர் செய்திகள்
ஆவடி அருகே மத்திய அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
- சிவகுமார் ஆவடியில் உள்ள எச்.வி.எப். மத்திய அரசு தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
- பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை, பணம் கொள்ளை போயிருந்ததை கண்டு சிவகுமார் அதிர்ச்சி அடைந்தார்.
திருநின்றவூர்:
ஆவடியை அடுத்த கோவில் பதாகை அசோக் நகரை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 50). இவர் ஆவடியில் உள்ள எச்.வி.எப். மத்திய அரசு தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு மூலக்கடையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். பின்னர் இன்று காலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார்.
போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.