பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
- கார்த்திக் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியை பார்ப்பதற்காக சென்றார்
- கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் மகா லட்சுமி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 29).
தனியார் ஏ.சி. நிறுவ னத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுசிகா. இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. எனவே கவுசிகா அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று கார்த்திக் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியை பார்ப்பதற்காக சென்றார்.
அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்த னர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து இதில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளை யடித்து தப்பிச் சென்றனர்.
மறுநாள் வீட்டிற்கு திரும் பிய கார்த்திக் கதவு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் இது குறித்து கோட்டூர் போலீ சாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்ற னர்.