திட்டக்குடி அருகே விபத்து ஜே.சி.பி வாகனம் மோதி வாலிபர் பலி
- இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்து 3 வயது மகன் உள்ளான்.
- படுகாயம் அடைந்த சுப்ரமணியனை மீட்டு சிகிச்சைக்காக ராமநத்தம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வி.சித்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி மகன் சுப்ரமணியன் (வயது 32) விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்து 3 வயது மகன் உள்ளான். இந்நிலையில் நேற்று இரவு சுப்ரமணியன் தனது மோட்டார் சைக்கிளில் வி.சித்தூர் பகுதியில் இருந்து ராமநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் ஜே.சி.பி வாகனம் ஒன்று வந்தது. ராமநத்தம் போலீஸ் நிலையம் முன்பு வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஜே.சி.பி வாகனம் முன்னால் சென்ற மோட்டார் சைக்கி ளில் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி சுப்ரமணியன் கீழே விழுந்தார். இதில் எதிர்பாராத விதமாக ஜே.சி.பி வாகனத்தின் சக்கரங்களில் சிக்கி பலத்த படுகாயம் அடைந்தார்.
விபத்து போலீஸ் நிலையம் முன்பு நடந்ததால் உடனே விரைந்த ராமநத்தம் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த சுப்ரமணியனை மீட்டு சிகிச்சைக்காக ராமநத்தம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சை க்காக 108 ஆம்புலன் மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலே சுப்ரமணியன் உயிரி ழந்தார். இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஜேசிபி வாகன டிரை வரான தச்சூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (22)என்பவரை கைது செய்தனர். அப்போது கார்த்திக் மதுபோதையில் இருந்ததால் போலீசாரு டன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஜே.சி.பி எந்திர டிரைவர் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியது போ லீசாரின் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் ஜே.சி.பி எந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் கார்த்திகிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.