உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளை ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வேலுச்சாமி கேடயம் வழங்கி பாராட்டிய போது எடுத்த படம். அரு–கில் பள்ளி அறக்–கட்–டளை நிர்–வா–கி–கள் மற்–றும் பள்ளி முதல்–வர் உள்–ள–னர்.

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை

Published On 2022-06-23 13:00 IST   |   Update On 2022-06-23 13:00:00 IST
  • 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சாதனை,விளையாட்டில் தேசிய அளவில் சாதனை.

திருப்பூர் :

திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-2 தேர்வில் பள்ளி மாணவிகள் ஜெயவாணி 600-க்கு 594 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மோனிகா 592 பெற்று 2-ம் இடமும், சண்முகபிரியா 591 பெற்று 3-ம் இடமும் பிடித்துள்ளனர்.

மேலும் கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், கணக்கு பதிவியல், வணிகவியல், பொருளியல், வணிக கணிதம் உள்ளிட்ட பாடங்களில் 64 மாணவர்கள் 100-க்கு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 73 சதவீத மாணவர்கள் 500-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இதேபோல் 10-ம் வகுப்பு தேர்வில் மாணவிகள் ஹேமவர்தினி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், பாலஹர்சினி 490 பெற்று 2-ம் இடமும், மாணவன் அருள்குமரன் 487 பெற்று 3-ம் இடமும் பிடித்துள்ளனர். மேலும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் 11 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் வேலுச்சாமி, பள்ளி அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ், பொருளாளர் ஸ்ருதி, பள்ளி முதல்வர் மணிமலர் மற்றும் ஆசிரிய - ஆசிரியைகள் பாராட்டினார்கள்.

10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சாதனை,விளையாட்டில் தேசிய அளவில் சாதனை, நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே 4 மாணவர்கள் வெற்றி, 2022 குடியரசு தினவிழாவில் பள்ளி மாணவி குடியரசுத் தலைவர் முன்னிலையில் பரதநாட்டியம் ஆடியது உள்பட பல்வேறு பெருமைகளை கொண்ட பள்ளியாகவும், சிறந்த மாணவர்களை உருவாக்கும் பள்ளியாகவும் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளங்கி வருகிறது என்று பள்ளி தாளாளர் வேலுச்சாமி தெரிவித்தார்.

Tags:    

Similar News