உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் சிறை கைதிகள் விதிகளின் படி நடத்தப்படுகிறார்கள் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் பேட்டி

Published On 2023-09-01 15:38 IST   |   Update On 2023-09-01 15:38:00 IST
  • மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை, காவல்துறை ஒருங்கிணைந்து செயல்படுவதால், விதிகளின்படி எல்லாம் சிறப்பாக உள்ளது.
  • சிறைச்சாலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

தருமபுரி,

மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ண தாசன், தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள், மகளிர் விடுதிகள் சிறைச்சாலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த அவர், தமிழகத்தில், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள், மகளிர் விடுதிகள், சிறைச்சாலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறோம்.

அந்த அடிப்படையில் தருமபுரி மாவட்டத்திலுள்ள விடுதிகள், காப்பகங்கள், மாவட்ட மத்திய சிறைச்சாலை மற்றும் கிளைச்சிறைச்சாலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளாதாக தெரிவித்த அவர், கடந்த மாதம் நெல்லையில் இதே போன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.

தருமபுரியில் ஆய்வு செய்ததில், மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை, காவல்துறை ஒருங்கிணைந்து செயல்படுவதால், விதிகளின்படி எல்லாம் சிறப்பாக உள்ளது. தமிழத்தை பொறுத்தவரை 21 ஆயிரம் சிறை கைதிகளை அடைக்க இட வசதி உள்ளது.

ஆயினும் தமிழகத்தில் 16 ஆயிரம் பேர் சிறை வாசிகளே சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைகளில் அறைகள் தூய்மையாக உள்ளதா, காற்றோட்ட வசதி, சூரிய வெளிச்சம், மின் விளக்குகள், மின் விசிறி வசதி , சிறைவாசிகளுக்கு உணவு, மருத்துவ வசதி, கழிவறை வசதி உள்ளதா எனவும், தவிர சிறைவாசிகளுக்கு சட்ட உதவி அளிக்கப்படுகிறதா, உறவினர்களிடமிருந்து வழங்கபடும் செய்திகள் முறையாக வழங்கபடுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யபட்டதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News