உள்ளூர் செய்திகள்
லாரியில் இருந்து இரும்பு கம்பி பாரம் சரிந்து விழுந்து விபத்து
- எதிர்பாராத விதமாக தேசிய நெடுஞ் சாலையில் உள்ள பாலத்தின் மீது லாரியின் பின்பகுதி சாய்ந்து விழுந்தது
- அந்த வழியாக போக்குவரத்து ஏதும் இல்லாத காரணத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
காவேரிப்பட்டினம்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பைபாஸ் தேசிய நெடுஞ்சா லையில் மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரில் இருந்து கொச்சிக்கு இரும்பு கம்பிகள் பாரத்துடன் லாரி சென்றது. கிருஷ்ண கிரி தருமபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தேசிய நெடுஞ் சாலையில் உள்ள பாலத்தின் மீது லாரியின் பின்பகுதி சாய்ந்து விழுந்தது. அந்த வழியாக போக்குவரத்து ஏதும் இல்லாத காரணத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்த காவேரிப் பட்டணம் போலீசார் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.