சந்திப்பு மேம்பாலம் அருகே இரும்பு பேனர்கள் அகற்றப்பட்ட போது எடுத்தபடம்.
காற்றின் வேகத்தால் விபத்து ஏற்படாமல் இருக்க நெல்லை மாநகர பகுதியில் இரும்பு பேனர்கள் அகற்றும் பணி மும்முரம்
- தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி பேனர்கள் வைக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பேனர்கள் கிழிந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அவற்றையும் அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது.
நெல்லை:
நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி பேனர்கள் வைக்க கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதனை மீறி வைப்பவர்கள் மீது அபராதம், சிறை தண்டனை விதித்தல் உள்ளிட்ட நடவடி க்கை களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதனை ஒட்டி நெல்லை மாநகராட்சியில் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பர பதாகைகள் உள்ளிட்ட வற்றை அகற்றும் பணி மாநகராட்சி அதிகாரி களால் மேற்கொள்ளப்பட்டு வருகி றது.
இந்நிலையில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மாடி பகுதியில் இரும்பு கம்பிகளால் சட்டங்கள் அமைக்கப்பட்டு அதில் விளம்பர பதாகைகள் வைத்திருப்பவர்கள் உரிமம் பெற்று வைத்துள்ளனரா? அவ்வாறு வைத்திருந்தால் அவர்களுக்கான காலக்கெடு முடிந்து விட்டதா? என்பதையும் அறிந்து அவற்றை கண்காணிக்க கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். மேலும் தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால் காற்றின் வேகத்தால் பேனர்கள் கிழிந்து சாலைகளில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அவற்றையும் உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் நெல்லை மாநகர பகுதியில் 4 மண்டலங்களிலும் சுகாதார அலுவலர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார் வையில் பேனர்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தச்சை மண்டலத்தில் சுகாதார அலுவலர் சாகுல் அமீது மேற்பார்வையில் சந்திப்பு பகுதியில் வணிக நிறுவனங்கள் மீது அமைக்கப்பட்டுள்ள பேனர்களை அப்புறப் படுத்தும் பணி இன்று நடைபெற்றது. அதேபோல் நெல்லை மண்டலத்தில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் அனுமதி இன்றி வைக்கப் பட்டுள்ள பேனர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.