உள்ளூர் செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளரை பாராட்டி பரிசு வழங்கப்பட்ட காட்சி.

சிவகிரி பேரூராட்சி சார்பாக தீவிர தூய்மைப்பணி முகாம்

Published On 2022-08-28 08:47 GMT   |   Update On 2022-08-28 08:47 GMT
  • தூய்மை பணியாளர் மூக்காண்டியை பாராட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி, சுந்தர வடிவேலு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
  • தீவிர தூய்மைப்பணி முகாம் முக்கிய பகுதிகளில் நடைபெற்றது.

சிவகிரி:

சிவகிரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சிறப்பாக செயல்பட்டு, வார்டு பகுதியை தூய்மையாக மாற்றி குப்பைகளை தரம் பிரித்து சிறப்பாக செயல்பட்ட 17-வது வார்டு தூய்மை பணியாளர் மூக்காண்டியை பாராட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி, சுந்தர வடிவேலு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், கவுன்சிலர்கள், நியமனக்குழு உறுப்பினர் விக்னேஷ், ரத்தினராஜ், அருணாசலம், முத்துலட்சுமி, பேரூராட்சி அலுவலர்கள், சக பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் லாசர் எட்வின், தூய்மை மேற்பார்வையாளர் குமார், குழு மேற்பார்வையாளர் தினேஷ்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து சிவகிரி பேரூராட்சி சார்பாக தீவிர தூய்மைப்பணி முகாம் 15-வது வார்டு நாடார் கடை பஜாரில் உள்ள பாலம், வடகால் ஓடை மற்றும் முக்கிய பகுதிகளில் நடைபெற்றது.

Tags:    

Similar News