உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் அதிக அளவு நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது மேடுப்பள்ளி பகுதியில் வயல்களில் விளைந்த நெல்பயிரை எந்திரம் மூலம் அறுவடை செய்த போது எடுத்தபடம்.

சூளகிரி பகுதியில் நெல் அறுவடை தீவிரம்

Published On 2023-05-11 14:58 IST   |   Update On 2023-05-11 14:58:00 IST
  • நெல் விளைச்சல் அமோகமாக விளைந்து உள்ளது.
  • பகல் நேரங்களில் விளைந்த நெல் பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்று வட்டாரங்களான கீரண ப்பள்ளி, பாத்தகோட்டா, உத்தனப்பள்ளி, அத்தி முகம், மேடுபள்ளி, கோபசந்திரம், காமன்தொட்டி, பேரிகை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நெல் விளைச்சல் அமோகமாக விளைந்து உள்ளது.

கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மழையில் நெல்பயிர் சேதம் வந்து விடாமல் பகல் நேரங்களில் விளைந்த நெல் பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News