உள்ளூர் செய்திகள்
குடவாசலில் ஒரு வயலில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பருத்தி வயலில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
- சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி பயிரடப்பட்டுள்ளது.
- பருத்தியில் நோய் தாக்குவதாக விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், குடவாசல் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் நடப்பாண்டு சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி பயிரடப்பட்டுள்ளது.
அவ்வாறு பயிரடப்பட்டுள்ள பருத்தியில் தற்போது இலை சிவந்து, காய்ந்து விடுவதாக விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், தொழில்நுட்ப வல்லுநர் கருணாகரன் மற்றும் குடவாசல் வட்டார வேளாண்மை, உழவர் நலத்துறை உதவி இயக்குனர் ஜெயசீலன் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ரவி ஆகியோர் குடவாசல் வட்டாரத்தில் ஒரு விவசாயியின் பருத்தி வயலில் ஆய்வு மேற்கொண்டனர்.