உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் வருமான வரித்துறை உதவி ஆணையர் சீனிவாசன் பேசினார்.

தஞ்சை கல்லூரியில் வருமான வரி செலுத்துதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-10-20 14:37 IST   |   Update On 2023-10-20 14:37:00 IST
  • வரி செலுத்துவதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
  • விழா ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் கண்ணன் செய்திருந்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் வருமானவரி துறை சார்பில் வருமான வரி செலுத்துதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருது பாண்டியர் கல்வி நிறுவனங் களின் தலைவர் மருதுபாண் டியன் தலைமை தாங்கினார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா முன்னிலை வகித்தார். மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், துணை முதல்வர் தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை உதவி ஆணையர் சீனிவாசன் கலந்து கொண்டு வருமான வரியின் முக்கியத்து வத்தையும், வரி செலுத்துவதன் அவசியத்தையும் மாண வர்களுக்கு எடுத்துரைத்தார். இதில் வருமான வரித்துறை அலுவலர் வில்விஜயன் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன டைந்தனர். முன்னதாக மருது பாண்டியர் கல்லூரி யின் வணிக மேலாண்மை துறைத்தலைவர் வித்யா அனைவரையும் வரவேற் றார். முடிவில் வணிகவியல் துறை தலைவர் செந்தில் குமார் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் கண்ணன் செய்திருந்தார்.

Tags:    

Similar News