உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் ெதாடர் கொள்ளை சம்பவம்:எலக்ட்ரானிக்கல் கடை உள்பட 2 கடைகளில் கொள்ளை
- கடையில் இருந்து 22 ஆயிரம் மதிப்புள்ள லாக்கர், ஹோம்தியேட்டர், பணம் ஆகியவை திருடியுள்ளனர்.
- கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த 80 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பிசென்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் தளி பகுதியை சேர்ந்த விக்னேஸ் (வயது28) என்பவர் எலக்ட்ரானிக்கல் கடை நடத்தி வந்தார்.
நேற்று மர்ம நபர்கள் அந்த கடையில் இருந்து 22 ஆயிரம் மதிப்புள்ள லாக்கர், ஹோம்தியேட்டர், பணம் ஆகியவை திருடியுள்ளனர்.
இதே போல் கிருஷ்ணகிரி அடுத்துள்ள மாதேப்பள்ளியில் சவுளுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். இந்த கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த 80 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பிசென்றுள்ளனர்.
இது குறித்து அவர்கள் இருவரும் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.