உள்ளூர் செய்திகள்

மதர் தெரசா ஹெல்த் சென்டரின் முதல் தளம்- தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு விழா நடந்தது.

மருத்துவமனையின் முதல் தளம்- தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு விழா

Published On 2022-08-26 09:43 GMT   |   Update On 2022-08-26 09:43 GMT
  • அறுவை சிகிச்சை அரங்கு வசதிகளுடன் இயங்கி வரும் இம்மருத்துவமனை தேசிய தரச்சான்றிதழ் மற்றும் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்றுள்ளது.
  • அனைத்து உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

புனித அன்னை தெரசாவின் அன்பு வழியைப் பின்பற்றி தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் 2002ஆம் ஆண்டு முதல் ஜாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்துத் தரப்பினருக்கும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறது.

மதர் தெரசா பவுண்டே சன் 2016ஆம் ஆண்டு மதர் தெரசா ஹெல்த் சென்டர் என்ற மருத்துவமனையை நிறுவி மிகக்குறைந்த கட்டணத்தில் நவீன மருத்துவ சிகிச்சையை அனைத்துத் தரப்பினருக்கும் செய்து வருகிறது.

இம்மருத்துவமனையில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், இருதய நோய் மருத்துவம், மனநல மருத்துவம் மற்றும் தோல் நோய் மருத்துவம் ஆகியவை தலைசிறந்த மருத்துவர்களைக் கொண்டு பார்க்கப்படுகிறது.

இம்மருத்துவமனை, மருந்தகம், ஆய்வுக்கூடம் , அல்ட்ரா சவுண்டு- எக்கோ ஸ்கேன், அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கு ஆகிய வசதிகளுடன் இயங்கி வரும் இம்மருத்துவமனை தேசிய தரச்சான்றிதழ் மற்றும் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிநவீன வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு ஆம்புலன்ஸ் மிகக் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகிறது.

பொதுமக்களின் வேண்டு கோளுக்கு இணங்க புனித அன்னை தெரசாவின் 112-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதர் தெரசா ஹெல்த் சென்டரின் முதல்தளம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதில் உள் நோயாளிகள் தங்குவதற்கான குளிரூ ட்டப்பட்ட அறைகளும், அனைத்து உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவும் புதிதாக தொடங்க ப்பட்டு உள்ளது. அறுவை சிகிச்சை அரங்கம் நவீனபடுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய நிலையிலுள்ள இதனை தஞ்சாவூர் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டலமேலாளர் ஏ.ஆல்வின் மார்டின் ஜோசப் திறந்து வைத்து பவுண்டேசன் ஆற்றிவரும் சேவைப் பணிகளைக் குறித்தும் குறிப்பாக அதிந வீன முறையில் செய்துவரும் மருத்துவப் பணிகளை குறித்தும் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சிக்கு பவு ண்டேசன் சேர்மென் சவரிமுத்து தலைமை தாங்கினார்.

அறங்காவலர் சம்பத் ராகவன் முன்னிலை வகித்தார்.

அறங்காவலர் கோவி ந்தராஜ் நன்றி கூறினார்.

தஞ்சையைச் சார்ந்த பிரபல மருத்துவ ர்களும், தொழிலதிபர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட இயக்குநர் ரத்தீஷ்குமார், நிர்வாக மேலாளர் மெர்சி, தளவாட மேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராணி, விஜி, ரேணுகா மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகேஷ்வரன், சூசைராஜா, கிறிஸ்டி, வர்ஷினி, ஷர்மிளா, ஹெல்த் சென்டர் ஊழியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News