உள்ளூர் செய்திகள்
புதிய ரேஷன் கடை கட்டிடத்தை இரா.காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு
- மணலூர் ஊராட்சியில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.
- நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலம்:
கும்பகோணம் அடுத்த வலங்கைமான் அருகே இனாம் கிளியூர் கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டிடமும், மணலூர் ஊராட்சியில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கமும் கட்டப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
விழாவில் வலங்கைமான் அ.தி.மு.க. கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சங்கர், இளவரசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாந்தி தேவராஜன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் ராஜராஜசோழன், இனாம்கிளியூர் ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அருண், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.