உள்ளூர் செய்திகள்
பல்நோக்கு கூடத்தை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
வேதாரண்யத்தில், பல்நோக்கு கூடம் திறப்பு
- ரூ.25 லட்சத்தில் சமுதாய கூடம் கட்டப்பட்டது.
- பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நாகை சாலையில் கல்வித்துறைக்கு சொந்தமான இடத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கல்வி துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி அலுவலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பையன், திலீபன், கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த வழகறிஞர் நாமசிவாயம், சமூக ஆர்வலர் வசந்தி செல்வகுமார், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள், பல்வேறு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.