எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா: பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய எம்.எல்.ஏ.க்கள்
- ரூ.2.84 கோடி மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது
- மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி. உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
பெரியபாளையம்:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் ரூ.2.84 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்தார்.
இந்நிலையில், இந்த அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் குத்து விளக்கேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி. உமாமகேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், சார் ஆட்சியர் (பொன்னேரி) ஐஸ்வர்யா ராமநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேல்,
எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ஸ்டாலின், ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ், துணைப் பெருந்தலைவர் வக்கீல் சுரேஷ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜே.மூர்த்தி, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்தியவேலு மற்றும் எல்லாபுரம் ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.