உள்ளூர் செய்திகள்

குடிநீரில் சாக்கடை கலப்பதாக கூறி கவுன்சிலர் ராதிகா தலைமையில் பொது மக்கள் போராட்டம் செய்தனர்.

விழுப்புரம் நகரில் குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலப்பதாக போராட்டம்

Published On 2022-07-01 06:31 GMT   |   Update On 2022-07-01 07:50 GMT
  • விழுப்புரம் நகரில் குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலப்பதாக போராட்டம் நடைபெற்றது.
  • சம்பவத்தை அறிந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வடக்கு தெரு ,மாசிலாமணி பேட்டை,முகமதியார் தெரு உள்ளிட்ட தெருக்களை உள்ளடக்கியது 9-வதுவார்டு.

இப்பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் கசிவு ஏற்படுவதாகவும் கழிவுநீர்கள் இக்குழாய் வழியாக வந்து குடிநீர் கலப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக குடியிருப்பு வாசிகள் அப் பகுதி கவுன்சிலர் வக்கீல் ராதிகாவிடம் முறையிட்டனர்.

இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் முறையிடுவதாக தெரிவித்திருந்தனர் கவுன்சிலர் அதிகாரியிடம் முறையிட்டும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து கவுன்சிலர்ராதிகா தலைமையில் பொதுமக்கள் குடிநீர் குழாய் கசிவு ஏற்பட்ட இடத்தில் திடீரென்று ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சம்பவத்தை அறிந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர் அதனை தொடர்ந்துகவுன்சிலர் ராதிகா உள்ளிட்டோர் அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News