உள்ளூர் செய்திகள்

உப்பள பகுதியில் தேங்கியுள்ள மழைநீர்.

வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி நிறுத்தம்

Published On 2022-10-20 09:47 GMT   |   Update On 2022-10-20 09:47 GMT
அகஸ்தியம்பள்ளியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பாத்திகள் அமைத்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில்வடகிழக்குபருவ மழை காலம் துவங்கிய நிலையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள பல ஆயிரக்கக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்கள் மழைநீரால் சூழப்பட்டதால் உப்பு உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது

இதனால் உப்பளத்தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்

தமிழகத்தில் உப்பு உற்பத்திக்கு தூத்துக்குடிக்கு அடுத்த இடத்தை பிடிப்பது நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியாகும். வேதாரண்யத்தில் இருந்து தெற்கே கோடியக்கரை செல்லும் வழியில் உள்ள அகஸ்தியம் பள்ளியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பாத்திகள் அமைத்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் சுமார் 3500 ஏக்கர் அளவில் சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களால் சாப்பாட்டுக்கு தேவையான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தியாகும் அனைத்து வகை உப்பும் சாலை மார்க்கதில் லாரிகள் வழியாக தான் ஏற்றுமதியாகிறது.

இந்த தொழிலை நம்பி பாத்தி அமைத்தல், உப்பு வாறுதல், ஏற்றுமதி, மூட்டைகள் பிடித்தல் என பல வழிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்

தற்போது பெய்த மழையால் அனைத்து உப்பள பகுதிகளும் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

இதேபோல உப்பள பகுதிக்குள் செல்லும் அனைத்து சாலைகளையும் சேதமடைந்து அனைத்து உப்பள சாலைகளும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டில் கடந்த சில மாதங்களாக பருவம் தவறி மழை பெய்ய துவங்கிய உப்பளங்கள் பாதிக்கப்பட்டது.

மேலும் தற்போது பருவமழை காலம் தொடங்கிய நிலையில் ஜனவரி வரை மழை பொழிவு இருக்கும் என்பதால் உப்பள பகுதிகளில் முழுமையாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்து.

Tags:    

Similar News