உள்ளூர் செய்திகள்

சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேதாரண்யத்தில், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பியவருக்கு வரவேற்பு

Published On 2023-05-09 08:07 GMT   |   Update On 2023-05-09 08:07 GMT
  • கடந்த 1995-ம் ஆண்டு தேர்வாகி ராணுவத்தில் பணியாற்றியவர்.
  • மாலை அணிவித்து, தேசிய கொடி கொடுத்து தேசிய கீதம்பாடி சல்யூட் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கணேசன்.

இவரது மனைவி அமிர்தவல்லி. உப்பு உற்பத்தி மற்றும் விவசாய பணிகள் செய்து வருகின்றனர்.

இவர்களது மகன் முருகேசன்.

இவர் கடந்த 1995-ம் ஆண்டு இந்திய ராணுவத்திற்கு தேர்வாகி ராணுவத்தில் பணியாற்றியவர். கார்கில் போரிலும் சிறப்பாக பணியாற்றியவர்.

தற்போது முருகேசன் பணி ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு திரும்பினார்.

அவருக்கு வேதாரண்யத்தில் முன்னாள் ராணுவ நல சங்க தலைவர் தமிழரசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பொருளாளர் நாகராஜன் முன்னிலையில் முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் மாலை அணிவித்து, தேசிய கொடி கொடுத்து தேசிய கீதம்பாடி சல்யூட் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

பின்னர் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, கவுன்சிலர் ராஜு, மாநில வர்த்தக சங்க துணை தலைவர் தென்னரசு, நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் வீரசுந்தரம் உள்பட முக்கிய பிரமுகர்கள், கிராமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆசிரியர் கருணாநிதி வரவேற்றார். முடிவில் ராணுவ வீரர் முருகேசன் மனைவி அம்பிகா நன்றி கூறினார்.

Tags:    

Similar News