நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பேசினார்.
திருத்துறைப்பூண்டியில், விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சார இயக்கம்
- கல்லூரி சார்பில் மாணவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.
- மாற்றத்தை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்கிற மனிதர்கள் வாழ்வில் முன்னிலை வகிக்கின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட நிர்வா கம், பொது நூலகத்துறை, பபாசி ஆகியவை இணைந்து மாவட்டத்தில் முதல் புத்தக திருவிழா நடத்த உள்ளது.
இதற்கான விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சார இயக்கம் திருத்துறைப்பூண்டி பிர்லியண்ட் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவில் திருத்து றைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கினார்.
ராய் டிரஸ்ட் நிறுவன தலைவர் துரை ராயப்பன், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், வாசிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி, வாசகர் வட்ட துணை தலைவர் கமல், கல்லூரி நிர்வாக அலுவலர் முத்தலிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பேசுகையில்:-
திருவாரூரில் நடைபெறும் புத்தக திருவிழாவில் கல்லூரி சார்பில் மாணவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.
இன்றைய போட்டி நிறைந்த உலகில் அனைத்து துறைகளிலும் தங்களது அறிவை விரிவுபடுத்தி கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
மாற்றத்தை எதிர்கொ ண்டு ஏற்றுக்கொள்கிற மனிதர்கள் வாழ்வில் முன்னிலை வகிக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் விமலா அனை வரையும் வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் தவமலர் நன்றி கூறினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மணலி நூலகர் செந்தில் நாதன் செய்திருந்தார்.