தென்மண்டல செஸ் போட்டியில் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் மாணவர்கள் சாதனை
- ஐந்து மாநிலங்களில் இருந்து 4585 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியிலிருந்து 13 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
மத்தூர்,
சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கிடையிலான தென்மண்டல அளவிலான செஸ் போட்டி சென்னையில் கடந்த 29 முதல் 2-ந்தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் உட்பட ஐந்து மாநிலங்களில் இருந்து 4585 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியிலிருந்து 13 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
5 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சித்தார்த் மற்றும் ஹரிஷ்வா 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சரவண பாலாஜி ஆகியோர் மூன்றாம் இடம் பெற்றனர். 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மோகித் இரண்டாம் இடம் பெற்று சாதனை புரிந்தார்.
போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய, இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா அதியமான் பப்ளிக் பள்ளியில் சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
அதில் அதியமான் கல்வி நிறுவனங்களிள் நிறுவனர் சீனி. திருமால் முருகன், செயலர் சோபா திருமால் முருகன், நிர்வாக இயக்குநர் சீனி. கணபதி ராமன், முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய அனைத்து மாணவர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர் ஆகியோரை பாராட்டினர்.
மேலும் கூடுதலாக பயிற்சியும், தொடர் முயற்சியும் மேற்கொண்டு வரும் ஆண்டில் முதலிடம் பிடித்து தேசிய அளவிலும் பின் நம் தாய் நாட்டிற்காக விளையாடும் அரிய வாய்ப்பினை பெற அயராது முனைப்புடன் பயிற்சி பெற வேண்டும் என உற்சாக மூட்டினார்கள். போட்டியில் பங்கேற்ற, சிறப்பிடம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.