உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

விக்கிரவாண்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-06-29 07:42 GMT   |   Update On 2022-06-29 07:42 GMT
  • விக்கிரவாண்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர் .

விழுப்புரம்.

விக்கிரவாண்டி பேரூராட்சியில் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பஸ் நிலையத்தில் நடந்த பேரணியை பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் , துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி மீண்டும் மஞ்சள்பை கோஷத்தை எழுப்பியபடி,பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி சென்றனர் .

முன்னதாக பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர் . பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை ,துணை சேர்மன் பாலாஜி, சப்–இன்ஸ்பெக்டர் ஆம்ஸ்டிராங், சுகாதார ஆய்வாளர் பிருத்திவிராஜ், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆனந்தி, சுதா, வீரவேல், சுரேஷ், வர்த்தகர் சங்க செயலாளர் ஜியாவுதீன் , பொருளாளர் சாதிக் பாட்ஷா. துணை தலைவர் சர்புதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News