உள்ளூர் செய்திகள்

மீன் பிடிக்க ஏலத்தொகை 10 மடங்கு அதிகரிப்பு

Published On 2022-11-16 15:27 IST   |   Update On 2022-11-16 15:58:00 IST
  • 2022 - 23-ம் ஆண்டிற்கு மீன்பிடிப்பதற்கான ஏலம் நடத்தப்பட்டது.
  • 10 மடங்கிற்கு அதிகமாக ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் தோட்ட திம்மனஹள்ளி, கொப்பகரை, பிள்ளையார் அக்ரஹாரம் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு உள்பட்ட ஏரிகளில் 2022 - 23-ம் ஆண்டு மீன்பிடிக்க ஏலம் நடத்தப்பட்டது.

முன்வைப்பு தொகை செலுத்தி 15-க்கும் மேற்பட்டோர் இந்த ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் கடந்த முறை ஏலம் விடப்பட்டதை விட 10 மடங்கிற்கு அதிகமாக ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டதால் ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் அதிகாரிக ளுடன் ஏலம் எடுக்க வந்தவர்கள் வாக்குவாதத்தில் முதலிடம். அப்போது பேசிய கெலமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி, இது ஏலத்தொகை நாங்கள் செய்தது அல்ல.கிருஷ்ணகிரியிலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறை இயக்குனர் மூலம்தான் ஏலத்தொகை முடிவு செய்யப்பட்டது.

ஏலத்தொகை அதிகம் என்று கூறப்படுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி மீண்டும் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து ஏலம் எடுக்க வந்தவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.இதையடுத்து மறு தேதி குறிப்பிடாமல் ஏலம் தள்ளி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News