மனுக்களை மாலையாக போட்டுவந்த கவுன்சிலர்.
தாரமங்கலம் நகராட்சி கூட்டத்தில்மனுக்களை மாலையாக போட்டு வந்த கவுன்சிலரால் பரபரப்பு
- தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார்.
- வேதாசலம் தனது வார்டில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்பட வில்லை என்று கூறி கோரிக்கை அடங்கிய மனுக்களையும், போட்டோக்களையும் கழுத்தில் மாலையாக போட்டு கொண்டு சங்கு ஊதிக்கொண்டு மணியடித்தவாறு வந்தார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். ஆணை யாளர் முஸ்தபா முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு வந்த தி.மு.க. கவுன்சிலர் வேதாசலம் தனது வார்டில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்பட வில்லை என்று கூறி கோரிக்கை அடங்கிய மனுக்களையும், போட்டோக்களையும் கழுத்தில் மாலையாக போட்டு கொண்டு சங்கு ஊதிக்கொண்டு மணியடித்தவாறு வந்தார்.
இதனால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. பின்னர் தனது வார்டில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கூறி ஆணையாளரிடம் மனுகொடுத்து விட்டு அமர்ந்தார். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க. கவுன்சிலர் அனுராதா தனது வார்டுக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகே தேங்கும் மழை நீர் மற்றும் சாக்கடை நீரை அகற்ற புதிய கால்வாய் அமைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
பா.ம.க. கவுன்சிலர் தனபால், நகராட்சி பகுதி யில் உள்ள 12 மயானங்க ளையும் பராமரித்து குடிநீர், மின் விளக்கு அமைக்க வேண்டும் என்றும், சந்தை பேட்டை பகுதியில் இயங்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிரந்தர இடம் உருவாக்கி தருமாறு வலியுறுத்தினார்.
கூட்டத்தில் துணைத்த லைவர் தனம், அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்ர மணியம், தி.மு.க. கவுன்சி லர்கள் சுபர்ணா, அமுதா, அகிலாண்டேஸ்வரி, கோகிலா, மைசூர், அர்த்த னாரி, முருகன், லட்சுமி, ஆர்த்தி, சாமுண்டிஸ்வரி, பா.ம.க. கவுன்சிலர் பழனிசாமி உட்பட 13 பேர் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
தங்களது வார்டு பகு திக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் கூட்டத்தை புறக்கணித்தாக அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.