10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்கிருஷ்ணகிரி பாரத் பள்ளி மாணவர்கள் சாதனை
- அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் மூன்று மாணவ, மாணவியர்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
- பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பள்ளியின் நிறுவனர் மணி பாராட்டி கேடயம் வழங்கினார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள்10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில் பயின்ற மாணவன் சுனில் 490 முதல் மதிப்பெண்ணும், தேவதர்ஷினி என்கின்ற மாணவி 484 பெற்று இரண்டாம் மதிப்பெண்ணும், டார்வின் என்கின்ற மாணவன் 483 மூன்றாம் மதிப்பெண்ணும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் 450 மதிப்பெண்களுக்கு மேல் 11 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 30 மாணவர்களும் பெற்று பள்ளிக்கு சிறப்பு சேர்த்துள்ளனர். மேலும் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் மூன்று மாணவ, மாணவியர்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக தமிழில் 90 மதிப்பெண்களுக்கு மேல் 31 மாணவர்களும், ஆங்கிலத்தில் 34 மாணவர்களும், கணிதத்தில் 43 மாணவர்களும், அறிவியலில் 52 மாணாக்கர்களும், சமூக அறிவியலில் பாடத்தில் 48 மாணவர்களும் பெற்றுள்ளனர். பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பள்ளியின் நிறுவனர் மணி பாராட்டி கேடயம் வழங்கினார்.
மேலும் மாணவ, மாணவிகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை தாளாளர் கிருஷ்ணவேணி மணி, செயலர் சந்தோஷ் பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பாராட்டினார்.