நிலக்கடலை செடியுடன் வந்து கோட்டாட்சியர் ரஞ்சித்திடம் மனு கொடுத்த விவசாயிகள்.
தஞ்சையில், நிலக்கடலை செடியுடன் வந்து மனு அளித்த விவசாயிகள்
- நிலக்கடலை, உளுந்து, எள், சோளம், நெல், கேழ்வரகு பயிரிட்டு விவசாயிகளுக்கு சிமெண்ட் களம் இல்லை.
- நிலக்கடலையை தனியார்கள் குறைந்து விலைக்கு கொள்முதல் செய்கின்றனர்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் நிர்வாகி ராமசாமி, பயிரிட்ட நிலக்கடலை செடியை எடுத்துக்கொண்டு கோட்டா ட்சியர் ரஞ்சித்திடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-
தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் சிவவிடுதி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளது. இங்கு நிலக்கடலை, உளுந்து, எள், சோளம், நெல், கேழ்வரகு பயிரிட்டு விவசாயிகளுக்கு சிமெண்ட் களம் இல்லை.
இதனால் ரோடுகளில் கொண்டு சோளம், நெல் காய ப்படும் நிலை ஏற்படுகிறது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே உடனடியாக சிமெண்ட் களம் அமைத்து தர வேண்டும்.
நிலக்கடலையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். எங்கள் பகுதி மானாவாரி பகுதியாகும். அதிகமாக நிலக்கடலை , உளுந்து, தட்டைபயறு, பாசி பயறு சாகுபடி செய்கிறோம்.
எனவே எங்கள் பகுதியில் களம் அமைத்து தர வேண்டும். நிலக்கடலையை தனியார்கள் குறைந்து விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகவில்லை.
அரசே நிலக்கடலையை கொள்முதல் செய்ய வேண்டும். இல்லையெ ன்றால் ஒழுங்குமுறை விற்ப னை கூட மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிலக்கடலை செடியுடன் வந்து விவசாயிகள் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.