உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
- கும்பகோணம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தின் முன்பு நிறுத்திவிட்டு சென்றார்.
- பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 33 ). சம்பவத்தன்று இவர் தெற்கு வீதியில் உள்ள ஒரு மெடிக்கல் கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதேபோல் தஞ்சை கீழவாசலை சேர்ந்த ஆரோக்கிய ஜெபாஸ்டின் (40) தனது மோட்டார் சைக்கிளை கும்பகோணம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தின் முன்பு நிறுத்திவிட்டு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டனர்.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் மேற்கு மற்றும் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள்களை தேடி வருகின்றனர்.