உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

தஞ்சையில், மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

Published On 2023-07-03 10:01 GMT   |   Update On 2023-07-03 10:02 GMT
  • மாற்றுத்திறனாளிகளுக்கு 2 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.
  • 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று தேசிய மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாநகர தலைவர் துரை, மாவட்ட செயலாளர் செல்லபாரி, மாநகரச் செயலாளர் லூர்துசாமி, மாவட்ட துணை செயலாளர் திருமலை கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஒன்றிய செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, லதா முருகன், சேகர், வேல்முருகன், முரளிதரன், முத்துலட்சுமி, அனிதா, வேலுமணி, செந்தில்குமார், ராசப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் நெடுவை சரவணன் கண்டன உரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் , வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News