உள்ளூர் செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-13 15:04 IST   |   Update On 2023-02-13 15:04:00 IST
  • மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
  • அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியை கண்டித்து கோஷம்.

தஞ்சாவூர்:

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர்சக்திவேல், பொருளாளர்பாலசுப்பிர மணியன், மாவட்ட நிர்வாகிகள்சந்திரகுமார், பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

கோரிக்கையை விளக்கி மூத்த தலைவர் கிருஷ்ணன், விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரமகன் , வி.தொ.ச மாவட்ட தலைவர்கோவிந்தராசு, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் சேவையா ஆகியோர் உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய பட்ஜெட்டை கண்டித்தும், அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் கட்சி நிர்வாகிகள் கலியபெருமாள், பாஸ்கர், திருநாவுக்கரசு, ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்க நிர்வாகிக ள்கோவிந்தராஜன், துரை.மதிவாணன், தாமரைச்செல்வன், செல்வம், பாலமுருகன், ஆசிரியர் ஓய்வு சுந்தரமூர்த்தி, விசிறி சாமியார் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில்ராமலிங்கம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News