குடிநீர் வராததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தது.
தகட்டூரில், ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
- கடந்த ஒரு வாரமாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட தண்ணீர் வரவில்லை.
- ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா பகுதியில் பல ஊராட்சிகளில் கடந்த ஒரு வாரமாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட தண்ணீர் வராததை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் தகட்டூர் கடைத்தெருவில் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சி தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். தென்னடார் ஊராட்சி தலைவர் தேவி செந்தில், தகட்டூர் ஊராட்சி தலைவர் ரேவதி பாலகுரு, தாணிக்கோட்டகம் ஊராட்சி தலைவர் முருகானந்தம், கடினல்வயல் ஊராட்சி தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோஷ ங்கள் எழுப்பி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், வருவாய்துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும் என் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.