உள்ளூர் செய்திகள்

சங்கராபுரத்தில் பேரூராட்சி மன்றம் சார்பில் இயற்கை உரம் தயாரிக்கும் இடத்தினை சங்கராபுரம் வள்ளலார் மாணவர்கள் களப்பணி ஆய்வு செய்தனர்.

சங்கராபுரத்தில் பேரூராட்சி மன்றம் சார்பில் இயற்கை உரம் தயாரிக்கும் பணி மாணவர்கள் பார்வையிட்டனர்

Published On 2022-07-25 06:10 GMT   |   Update On 2022-07-25 06:10 GMT
சங்கராபுரத்தில் பேரூராட்சி மன்றம் சார்பில் இயற்கை உரம் தயாரிக்கும் பணி மாணவர்கள் பார்வையிட்டு அதன் முக்கியத்துவத்தை கண்டறிந்தார்கள்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சி மன்றம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலமாக இயற்கை உரம் தயாரிக்கும் இடத்தினை சங்கராபுரம் வள்ளலார் பள்ளி மாணவர்கள் நேரில் களஆய்வு மேற்கொண்டு அதன் முக்கியத்துவத்தை கண்டறிந்தார்கள். பள்ளித் தாளாளர் இராம.முத்துகருப்பன் தலைமையில் வள்ளலார் பள்ளி மாணவர்கள் நேரில் சென்று சங்கரா புரம் நகரில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு பிளாஸ்டிக் தனியாக்கப்படுகிறது.

காய்கறிக் கழிவுகள், புஷ்பங்கள், முட்டைஓடுகள், டீத்தூள் ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு சம அளவில் அவைகள் கலக்கப்பட்டு சாணம், தண்ணீர் ஆகியவை சேர்க்கப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படும் விபரத்தினை பார்த்தார்கள். இந்நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் துரைதாகப்பிள்ளை மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News