உள்ளூர் செய்திகள்

ஊருக்கு ஒரு வனம் திட்டத்தை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.

பிள்ளையார்பட்டி ஊராட்சியில் ஊருக்கு ஒரு வனம் திட்டம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Update: 2022-10-06 10:08 GMT
  • சுமார் 80 ஆயிரம் மரக்கன்றுகள் பாதுகாக்கப்பட்ட இடங்களில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றோம்.
  • இம்மாத இறுதியில் ஒரு லட்சமாவது மரம் நடப்பட உள்ளது என்பது சிறப்புக்குரியதாகும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமைக் குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட பசுமைக் குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டம் உலக புவி தினத்தன்று துவங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 80 ஆயிரம் மரக்கன்றுகள் பாதுகாக்கப்பட்ட இடங்க ளில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றோம்.

இம்மாத இறுதியில் ஒரு லட்சம் ஆவது மரம் நடப்பட உள்ளது என்பது சிறப்புக்குரியதாகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவினை அதிகப்படுத்தும் நோக்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தினை தொடர்ந்து ஊருக்கு ஒரு வனம் திட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சி யில் தொடங்கப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மியாவாக்கி அடிப்படையில் அடர்ந்த காடுகள் உருவாக்கப்படுகிறது. இதில் ஆயிரம் சதுர அடியில் 200 முதல் 250 மர கன்றுகள் நடலாம். தற்போது ஒரு ஏக்கர் பரப்பளவில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டுள்ளது.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 ஊராட்சிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன் இன்னும் 4 மாத காலத்தில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சங்கர், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர். ராதிகா மைக்கேல், செயலாளர் முனைவர் ராம் மனோகர், இணைச் செயலாளர் பொறியாளர். முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம் பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், துணைத் தலைவர் ஜெயந்தி சதானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் சௌமியா ஜனார்த்தனன், ஊராட்சி மன்ற செயலாளர் சக்தி, இயக்க உறுப்பினர்கள் முனைவர் சுகுமாரன், செல்வராணி, தன்னார்வலர்கள் லத்தீப், ரவிக்குமார், கார்த்தி, பிரபாகரன், குருபிரசாத், அருந்ததி, இளவரசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News