உள்ளூர் செய்திகள்

 இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டதை படத்தில் காணலாம். 

பரமத்திவேலூரில்ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

Published On 2023-04-22 15:03 IST   |   Update On 2023-04-22 15:03:00 IST

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் ஹஜ்ரத் ஷகன்ஷா அவுலியா தர்ஹா பள்ளி வாசலில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு அமைதி ஊர்வலம் மற்றும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    முன்னதாக ஹஜ்ரத் ஷகன்ஷா அவுலியா தர்ஹா பள்ளி வாசல் முன்பு தொடங்கிய ஊர்வலம் அண்ணாசாலை வழியாக பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் பள்ளி வாசலை வந்தடைந்தது.

    தொடர்ந்து பள்ளி வாசல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் ஒருவரை ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூர் பள்ளி வாசல் நிர்வாக கமிட்டி தலைவர் சவான் சாகிப், நிர்வாக கமிட்டி செயலாளர் இக்பால், ஹஜ்ரத் ஷகன்ஷா அவுலியா தர்ஹா பள்ளி வாசல் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் செய்திருந்த னர். இதேபோல் பரமத்தி, பாலப்பட்டியிலும் ரமலான் சிறப்பு தொழுகை நடை பெற்றது.

    Tags:    

    Similar News