மாயமான பெண் ஊழியர் ஆஷா,
பண்ருட்டியில்தனியார் பள்ளி பெண் ஊழியர் மாயம்
- தனியார் பள்ளியில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்ற இவர் வீடு திரும்பவில்லை.
- டிரைவராக பணிபுரிந்து வரும் வழுதலம்பட்டு பாஸ்கர் (28) என்பவர் கடத்தியதாக தெரியவந்தது,
கடலூா:
பண்ருட்டி அருகே தோ ப்புக்கொல்லை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மகள் ஆஷா (எ) சுபா (வயது 23). இவர்அ தேபகுதியிலுள்ள தனியார் பள்ளியில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில்தேடினர்.எங்கும் கிடைக்கவில்லை
. அதே பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வரும் வழுதலம்பட்டு பாஸ்கர் (28) என்பவர் கடத்தியதாக தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரது தந்தை சின்னையன் முத்தாண்டி க்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் காடா ம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.