உள்ளூர் செய்திகள்
அரவை நேரத்தை குறைக்க கோரி டிராக்டர் கரும்பு விவசாயிகள் போராட்டம்
- வெயிலில் கரும்பு காய்ந்து எடை குறைந்து விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்படுகின்றன.
- லாரிக்கு வழங்கும் நேரபடி சமமாக டிராக்டருக்கும் வழங்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கூட்டுறவு சக்கரை ஆலை கடத்த மூன்று மாதங்களாக இந்த ஆண்டுக்கான அரவைப்பணி துவக்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த விவசாயிகள் அரவைக்காக கரும்பை லாரி மற்றும் டிராக்டர் மாட்டு வண்டி உள்ளிட்ட வாகனங்களில் எடுத்து வருகின்றனர்.
லாரிகளில் வரும் கரும்புக்கு அரவை நேரம் 24 மணி நேரமும் டிராக்டரில் வரும் கரும்புக்கு அரவை நேரம் 50 லிருந்து 60 மணி நேரமும் இருப்பதால் வெயிலில் கரும்பு காய்ந்து எடை குறைந்து விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்படுகின்றன.
லாரிக்கு வழங்கும் நேரபடி சமமாக டிராக்டருக்கும் வழங்க வேண்டும். வாகனங்களுக்கு டோக்கன் வழங்குவதை ஒழுங்கு படுத்த வேண்டும் எனக்கூறி டிராக்டரில் கரும்பு பாரம் ஏற்றி வந்த விவசாயி நூதன முறையில் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.