உள்ளூர் செய்திகள்
நெல்லிக்குப்பத்தில் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நெல்லிக்குப்பத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் எதிராக மாணவிகள் - விழிப்புணர்வு பேரணி
குழந்தை திருமணம் மற்றும் பெண்களை தவறாக சித்தரிப்பது,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் போன்றவற்றிற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கடலூர்:
நெல்லிக்குப்பத்தில் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி சார்பில் குழந்தை திருமணம் மற்றும் பெண்களை தவறாக சித்தரிப்பது, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் போன்றவற்றிற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நெல்லிக்குப்பம் பஸ் நிலையம் முன்பு மௌனமொழி விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி , பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராதிகா மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.