உள்ளூர் செய்திகள்

முகாமில் காமராஜ் எம்.எல்.ஏ. புதிய வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கினார்.

நன்னிலத்தில், வாக்காளர் சேர்க்கை முகாமை எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2023-11-06 09:25 GMT   |   Update On 2023-11-06 09:25 GMT
  • முகாமில் புதிதாக விண்ணப்பிக்க வந்த வாக்காளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
  • புதிய வாக்காளர்களுக்கு காமராஜ் எம்.எல்.ஏ. வாழ்த்துகளை தெரிவித்தார்.

திருவாரூர்:

நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனங்குடி, மாப்பிள்ளைக்குப்பம், ஆணைக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை முகாம் தொடர்பாக அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகளின் செயல்பாடுகளை கட்சியின் மாவட்டச்செயலாளரான முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது 1.1.2024 இல் 18 வயது நிரம்புகின்ற இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு வாக்காளர் சேர்க்கை முகாம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதை கட்சியினரிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

மேலும் வாக்காளர் சேர்க்கை முகாமில் புதிதாக விண்ணப்பிக்க வந்த இளம் வாக்காளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

புதிய வாக்காளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது நன்னிலம் ஒன்றியச் செயலாளர் இராம. குணசேகரன், நன்னிலம் நகரச் செயலாளர் பக்கிரிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News