உள்ளூர் செய்திகள்

மிட்டப்பள்ளியில் கார் மோதி பெண் பலி

Published On 2022-07-03 14:51 IST   |   Update On 2022-07-03 14:51:00 IST
  • பெண் வேகமாக சாலையை கடந்து ஓடி உள்ளார்.
  • 100 மீட்டருக்கு தூக்கி வீசப்பட்டது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மிட்டப்பள்ளி கிராம பகுதியில் இன்று அதிகாலை ஊத்தங்கரை பகுதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி செல்லும் வழித்தடத்தில் கார் ஒன்று அதி வேகமாக வந்து கொண்டிருந்தது.

இதனைக் கண்ட லட்சுமி (48) என்ற பெண் வேகமாக சாலையை கடந்து ஓடி உள்ளார்.

எதிர்பாராத விதமாக கார் அவர் மீது மோதியதில் அந்த இடத்தில் இருந்து 100 மீட்டருக்கு தூக்கி வீசப்பட்டு மூக்கு, வாய், காது உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவரை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் லட்சுமி இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

Tags:    

Similar News