உள்ளூர் செய்திகள்
மகராஜகடையில் சிறப்பு மருத்துவ முகாம்
- 55 மாணவர்களில், 27 பேர் தோல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டனர்.
- மருத்துவகுழுவினர் மாணவர்களை பரிசோதித்தனர்.
கிருஷ்ணகிரி,
மகராஜடை அடுத்த தாசினாவூரில் அரசினர் பிற்படுத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விடுதி உள்ளது. இதில் தங்கி கல்வி படிககும் 55 மாணவர்களில், 27 பேர் தோல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவலறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் உடனடியாக விடுதியில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்த ுவர்கள்,வெங்கடேஷ், கோவிந்தராஜ், மருந்தாளுனர் தவுலத், கிராம சுகாதார செவிலியர் கீதா அடங்கிய மருத்துவகுழுவினர் மாணவர்களை பரிசோதித்தனர்.
இதில், மாணவர்களுக்கு தோல் தொடர்பாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.