கிருஷ்ணகிரியில்ரேஷன்அரிசி கடத்தல்- பெண் கைது
- 183 மூட்டைகளில், 9 ஆயிரத்து, 150 கிலோ ரேஷன் அரிசி கர்நாடகாவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது.
- இது தொடர்பாக 2 பேரை தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் மினி லாரியில் கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 9.1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, மூர்த்தி மற்றும் போலீசார், நேற்று மதியம், கிருஷ்ணகிரி -ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சூளகிரி பெட்ரோல் பங்க் அருகே நின்ற மினி லாரியை சோதனையிட்டதில், 50 கிலோ அளவிலான, 183 மூட்டைகளில், 9 ஆயிரத்து, 150 கிலோ ரேஷன் அரிசி கர்நாடகாவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியுடன் மினிலாரியை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளரான கிருஷ்ணகிரி மாவட்டம், குள்ளம்பட்டி அடுத்த மோட்டூரை சேர்ந்த ஜெயந்தி (48) என்பவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக கர்நாடக மாநிலம், கோலாரை சேர்ந்த குபேந்திரன் (25) என்பவரை தேடி வருகிறார்கள்.