உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட காட்சி.

கிருஷ்ணகிரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்- கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

Published On 2022-08-15 09:54 GMT   |   Update On 2022-08-15 09:54 GMT
  • காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
  • அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணகிரி,

நாட்டின் 75-வது சுதந்திர விழா இன்று கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா இன்று காலை கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது.

இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் கலந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

இதில் தனி வட்டாட்சியர் சார்பில் ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்து 500 மதிப்பில் 12 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறை சார்பில் ரூ.17 ஆயிரத்து 640 மதிப்பில் 2 பயனாளிகளுக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 750 மதிப்பில் 2 பயனாளிகளுக்கும், சமூக நலத்துறை சார்பில் ரூ.6 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் 40 பயனாளிகளுக்கும், மாவட்ட மேலாளர் அலுவலகம் சார்பில் 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஒரு பயனாளிகளுக்கும் என மொத்தம் 57 பேருக்கு ரூ.18 லட்சத்து 87 ஆயிரத்து 890 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News