உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

Published On 2022-12-10 14:17 IST   |   Update On 2022-12-10 14:17:00 IST
  • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது.
  • தி.மு.க., அரசை கண்டிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் முனிவெங்கடப்பன், பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், சைலேஷ் கிருஷ்ணன், மாவட்ட பேரவை செயலாளர் கே.ஆர்.சி. தங்கமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினார்கள். ஒன்றிய செயலாளர் வேடி நன்றி கூறினார்.

கூட்டத்தில், சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகிய வற்றிற்காக தி.மு.க., அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும், 13-ந் தேதி நகராட்சி, மாநகராட்சி பகுதியிலும், 14-ந் தேதி அனைத்து ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

கடந்த 5-ந் தேதி டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் அ.தி.மு.க., சார்பில் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை கலந்து கொள்ள அழைப்புவிடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News