உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி சிப்காட்டில் முகாமிட்டிருந்த மூன்று காட்டு யானைகள், ஆற்றைக் கடந்து மேலுமலை காப்பு காட்டிற்கு விரட்டப்பட்டது.
கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற 2 பேர் கைது
- வாகனத்தை திருடி கொண்டு தப்ப முயன்ற 2 பேரை பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தார்.
- இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னப்புதூர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது35). கூலி தொழிலாளியான இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தை கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு ஓட்டன் முன் நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். பின்னர் வெளியே வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு தப்ப முயன்ற 2 பேரை பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பாஞ்சாலியூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் கிருபாகரன் (வயது16). பூவத்தியை சேர்ந்த முத்துராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.