உள்ளூர் செய்திகள்

கெலமங்கலத்தில் சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும்

Published On 2023-02-11 15:45 IST   |   Update On 2023-02-11 15:45:00 IST
  • கழிவுநீர் கால்வாய்கள் கடந்த 20 ஆண்டுகளாக அமைக்கப்படாமல் உள்ளன.
  • சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலை உள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கெலமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 6-வது வார்டு முதல் 15-வது வார்டு வரை உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் கடந்த 20 ஆண்டுகளாக அமைக்கப்படாமல் உள்ளன. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலை உள்ளது.

மேலும் 15-வது வார்டு கணேஷ் காலனியில் மயானத்திற்கு செல்லும் சாலை சீரமைக்கப்படாததால் மயானத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கெலமங்கலம் பேரூராட்சியில் சாலைகள் அமைத்து கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News