உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தளி அருகே கலு கொண்டபள்ளியில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

Published On 2022-11-22 15:44 IST   |   Update On 2022-11-22 15:44:00 IST
  • ஊராட்சி மன்ற அலுவலகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
  • ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலு கொண்டப்பள்ளி ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் போதிய இடவசதி இன்றி செயல்பட்டு வந்தது.

இங்குள்ள பொதுமக்கள் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 22.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணி நடைபெற்று அனைத்து பணிகளும் நிறைவுபெற்றது. இதனையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் நாகவேணி பிரபாகர், ஒன்றிய அவை தலைவர் கிரிஷ், துணை செயலாளர்கள் ரமேஷ், மஞ்சு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி, துணை தலைவர் சைத்ரா சுரேஷ் வரவேற்றனர்.

இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பா ளராக கலந்துகொண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் 75 பயனாளிகளுக்கு முதியோர் ஒய்வூதிய ஆணை வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் சீனிவாசன், சுந்தர், ரத்தினம்மா, சசிகலா, அனிதா, லட்சுமி, கீதா, ரவி உள்ளிட்ட துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News