உள்ளூர் செய்திகள்

ஓசூரில் தொழிற்சாலைகளுக்கான விபத்து தடுப்பு கருத்தரங்கம்

Published On 2022-07-11 15:10 IST   |   Update On 2022-07-11 15:10:00 IST
  • தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இயக்குநர்ஜெகதீசன் துவக்கி வைத்தார்.
  • பாதுகாப்பாக பொருட்களை கையாளுவது எப்படி என்று விளக்கப்பட்டது.

 ஓசூர்,

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுமம் தமிழ்நாடு பிரிவு இணைந்து கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு "விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பது" குறித்து ஒரு நாள் பாதுகாப்பு கருத்தரங்கம் ஒசூரில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கிணை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இயக்குநர்ஜெகதீசன் துவக்கி வைத்து துவக்க உரையாற்றினார்.

இக்கருத்தரங்கில் மின்சார பாதுகாப்பு, பாது காப்பாக பொருட்களை கையாளுதல், தீ தடுப்பு மற்றும் நடத்தை அடிப்படை யிலான பாதுகாப்பு குறித்து நிபுணர்கள் மூலம் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இக்கருத்தரங்கில் கூடுதல் இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகா தாரம்பூங்கொடி, சபீனா, இணை இயக்குநர், தொழலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், ஒசூர், ராஜகோபாலன் துணை தலைவர், டைட்டன் கம்பெனி, கைலாசநாதன், செல்லமுத்து, மனிதவள மேலாளர். அசேரக் லைலேண்ட் லிமிடெட் கவிதாசன், இயக்குநர், ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கோவை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News