உள்ளூர் செய்திகள்
ஓசூர் தனியார் நிறுவனத்தில் 3-வது மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி சாவு
- தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
- .அங்கு சிகிச்சை பலனின்றி சாரதி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சாரதி (வயது 52).இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்காக வந்து தங்கியிருந்தார்.
இந்நிலையில் அந்த நிறுவனத்தின் 3-வது மாடியில் கண்ணாடி பொருத்தும் பணியில் சாரதி ஈடுபட்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
அவரை மெட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சாரதி உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி சைலஜா கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.